ஏய்… உன்னமாதிரி எத்தனை பேரை பாத்திருக்கோம்…!
அதிமுக வரலாறு தெரியுமா? உன்னை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியேதை அதிமுகதான் என்று பேசி பாஜகவை பிழிந்து எடுத்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
லோக்சபா தேர்தல் 2024 பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. சிதம்பரம் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு பதிலடி கொடுத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவர் பேசியதாவது:
திமுக என்பது ஒரு கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. ஆனால் அதிமுக அப்படிப்பட்ட இயக்கம் அல்ல. மக்களுக்காக தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் தொடங்கிய இந்த கட்சியை கட்டிக்காத்தவர் ஜெயலலிதா.
2 கோடி தொண்டர்கள் கொண்ட வலிமையான இயக்கம் அதிமுக. 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டுள்ளது அதிமுக. நாட்டில் தமிழகம் முதன்மை மாநிலமாக மாற அதிமுகவே காரணம். தமிழக நலன்களுக்கு பாடுபட்ட அதிமுகவை தேர்தலுக்கு பிறகு இருக்காது, காணாமல் போவீர்கள் என்று பேசுகிறீர்கள்?
வெற்று அரசியல் செய்து கொண்டு இருக்கும்(ராம. சீனிவாசன்) அனைவரும் 2024 தேர்தலுக்கு பின்னர் காணாமல் போவீர்கள்? தாமரையை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. எங்களை பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்..? என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.