சென்னைக்கு புதிய ‘கமிஷனர்’…! 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 'தடாலடி' டிரான்ஸ்பர்….!
சென்னை: சென்னையின் மாநகர போலீஸ் ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் போன்ற அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு உள்ளார். சட்ட ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.