போலீசில் சேர விரும்புகிறீர்களா..-? அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்..!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல்துறையில் காவலர், சார்பு ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்(தொழில்நுட்பம் ஆகிய பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் தீயணைப்பு துறை காலி பணியிடங்கள், சிறைக்காவலர் பணியிடங்களில் ஆட்களை நிரப்பும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் பல மையங்களில் நடத்தப்படும். சப் இன்ஸ்பெக்டர் பணி தேர்வு சென்னையில் நடத்தப்படுகிறது. பொதுஅறிவு, உளவியல் தொடர்பான கேள்விகள் தேர்வில் இடம்பெறும்.
தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், வார்டன்கள் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 40 மார்க்குகளை பெற வேண்டும். மேலும் இது பற்றிய விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.