பெண்களை கெடுத்து, தூக்கி எறியும் பிரபல நடிகர்…! டுவிட்டரில் போட்டு தாக்கிய நடிகை..!
சென்னை: பெண்களை தமது ஆசைக்கு பயன்படுத்தி தூக்கி எறிபவர் நடிகர் விஷால் என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.
தமிழ் சினிமாவில் எழும் மோதல்களும், அதுபற்றி தகவல்களும் அவ்வளவு எளிதாக கடந்து போய்விட முடியாது. அதிலும் குறிப்பாக பிரபலமானவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டை அப்படியே ஒதுக்கிவிடவும் முடியாது.
இந் நிலையில் பிரபல நடிகரான விஷால் மீது நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
சினிமா துறையில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை முதலில் கண்டியுங்கள். சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். முன்னணி நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளை பாருங்கள்.
நீங்களும், உங்களின் நண்பர்களுக்கு எத்தனை பெண்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கி வீசி இருக்கிறீர்கள். உங்களின் கதாநாயகன் அந்தஸ்தை பாதிக்கப்பட்டு பெண்களிடம் காட்டுங்கள் என்று கூறி உள்ளார். பிஎஸ்பிபி பள்ளி பாலியல் விவகாரத்தை நடிகர் விஷால் கண்டித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக தான் காயத்ரி ரகுராம் இப்படி ஒரு பதிவுவை வெளியிட்டு அதிரடி காட்டி இருக்கிறார்.