மெட்ரோ ரயில்களை இயக்கிக் கொள்ள அனுமதி…? மத்திய அரசு முடிவு
சென்னை: ஊரடங்கு தளர்வின் போது மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு இப்போது 7வது கட்டமாக நடைமுறையில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 31ம் தேதி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ளது.
இந் நிலையில், புதிய அறிவிக்கப்பட்ட தளர்வுகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தளர்வுகளில் நாடு முழுவதும் மெட்ரோ ரயில்கள் சேவைகளை தொடர அனுமதி தரப்படும் என்று தெரிகிறது.
இது பற்றி அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மற்ற நடவடிக்கைகளுக்கான தடைகள் அப்படியே நீடிக்கும் என்று தெரிகிறது.