நாளை முதல் ஊரடங்கை மீறினால்…? கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை…!
சென்னை: நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதால் வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த கட்டுப்பாடுகளை பயன்படுத்தி ஊரடங்கை மதிக்காமல் பலர் ஊர் சுற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் தினசரி பாதிப்பு உச்சத்தில் இருப்பது இதுவும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. சென்னையில் இன்று கூடிய அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு விதிகளை மீறுபவர்களை என்ன செய்யலாம், நடவடிக்கை எடுக்கலாமா என்று கேட்டிருந்தார்.
இந் நிலையில் நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், zonal enforcement team என்பது அமைக்கப்பட்டு உள்ளதாகவும், காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஐஏஎஸ் தலைமையில் இந்த அணி செயல்படும் என்றும் கூறினார். ஊரடங்கை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.