பப்ஜி போனால் என்ன… FAU-G இருக்கே…! களத்தில் இறங்கிய மத்திய அரசு
டெல்லி: பப்ஜி விளையாட்டிற்கு மாற்றாக புதிய விளையாட்டு ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
கல்வான் மோதலையடுத்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இளைஞர்களின் விருப்ப விளையாட்டான பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தடையை விதித்தது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சிறுவர்கள், இளைஞர்களை கட்டி போட்ட பப்ஜி விளையாட்டுக்கு பதில் புதிய செயலி ஒன்று வெளியாகிறது. மத்திய அரசின் ஆத்மநிர்பார் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட இருக்கும் இந்த செல்போன் விளையாட்டிற்கு FAU-G என்று பெயர்.
இந்திய ராணுவ வீரர்கள், எல்லையில் ஊடுருவும் எதிரிகளை போரிட்டு வீழ்த்துவது போல் இந்த விளையாட்டு உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், பேட்மிண்டன் வீரர் கோபிசந்த் ஆகியோரின் ஆலோசனைகளின் அடிப்படையில் தயாரான இந்த FAU-G விளையாட்டுவை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செயலி அக்டோபர் மாதம் வெளியாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.