பிரபல மிமிக்ரி கலைஞர் மரணம்…! சோகத்தில் டிவி பிரபலங்கள்
சென்னை: பிரபல பல குரல் மன்னன் கோவை குணா, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு என்ற நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் டைட்டில் வின்னரான அவர் பின்னர் சில திரைப்படங்களிலும் நடித்தார்.
கடந்த ஓராண்டாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த குணா, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைய கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்ட அவரது உடலுக்கு பலர் அஞ்சலி செலுத்தினர். கோவை குணா மறைவுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள், நகைச்சுவை நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.