ஒன்றல்ல, இரண்டல்ல.. 19 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ்…! ஏர்லைன்ஸ் எடுத்த அதிரடி
வாஷிங்டன்: ஒன்றல்ல, இரண்டல்ல… 19 ஆயிரம் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டி இருக்கிறது ஒரு ஏர்லைன்ஸ் நிறுவனம்.
உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
பல தொழில் நிறுவனங்களும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றன. ஆகையால் அந்த நிறுவனங்கள் பணியாளர்களை டிஸ்மிஸ் செய்து வருகின்றன. அந்த வகையில், அமெரிக்கன் ஏர்லைன் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இப்போது வேறு வழியின்றி 19 ஆயிரம் பேரை டிஸ்மிஸ் செய்ய முடிவு எடுத்துள்ளது. வரும் 1ம் தேதி முதல் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய போவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.