Sunday, May 04 11:52 am

Breaking News

Trending News :

no image

இதென்ன கூத்து…! போலி ரெம்டெசிவிர் மருந்து சாப்பிட்டு கொரோனா நோயாளிகள் குணம்…!


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் போலி ரெம்டெசிவிர் மருந்து சாப்பிட்டதில் கொரோனா நோயாளிகள் குணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் வட மாநிலங்களில் கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த மருந்தை பெற நோயாளிகளின் உறவினர்கள் பெரும் அல்லல்படுகின்றனர்.

மக்களின் இந்த ஆர்வத்தையும், அவசரத்தையும் புரிந்து கொண்ட ஏமாற்று பேர்வழிகள் போலி ரெம்டெசிவிர் மருந்து தயாரித்து மார்க்கெட்டில் உலவ விட்டுள்ளனர். அப்படித்தான் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கும்பல் போலி ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து மார்க்கெட்டில் விற்றுள்ளது.

போலி என்று தெரியாமல் அந்த மருந்தை வாங்கிய பலரும் பயன்படுத்தி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் போலீசில் சிக்கி போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்றது அம்பலமானது. விசாரணையில் குளுக்கோசும், உப்பும், கலந்த நீர் நிரப்பப்பட்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர் விசாரணையில் போலி ரெம்டெசிவிர் மருந்தானது இந்தூரில் விற்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த மருந்தை எடுத்துக் கொண்ட 10 நோயாளிகள் பலியாகினர். அதே நேரத்தில் 90 சதவீதம் நோயாளிகள் குணம் பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

போலி ரெம்டெசிவிர் மருந்தை சாப்பிட்ட பலர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி இருப்பதை கண்டு சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயுள்ளனர். இது குறித்து விசாரணையும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Most Popular