பப்ஜி மதன் மனைவி யார்…? விசாரணையில் திடுக் தகவல்கள்…!
சென்னை: பப்ஜி மதன் மனைவியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளன.
பப்ஜி விளையாட்டு மூலம் பிரபலமாகி ஆபாச பேச்சின் மூலம் வம்பில் சிக்கி இப்போது உள்ளே இருப்பவர். அங்கே, இங்கே என்று ஓடி, போலீசுக்கு சவால் விட்டு கடைசியில் தருமபுரியில் போலீசிடம் சிக்கினார்.
மதன் என்பவர் என்று விசாரணையை தொடங்கி உள்ள போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. தொடக்கத்தில் பப்ஜி விளையாடி பின்னர் அதன் டெக்னிக்குகளை கரைத்து குடித்திருக்கிறார். அதை அப்படியே அச்சு பிசகாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
அப்படித்தான் கிருத்திகாவும் மதனுக்கு அறிமுகமாகி இருக்கிறார். போக போக இதுவே லவ்வாகிவிட, திருமணத்துக்கு முன்னரே கிருத்திகா கர்ப்பமாகி இருக்கிறார். காதலுக்கு சினிமா பெற்றோர்கள் போன்று இரு வீட்டிலும் எதிர்க்க, 2020ம் ஆண்டு வீட்டை விட்டு கல்யாணம் செய்து கொண்டனர்.
பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டு இருந்தாலும் விபிஎன் மூலம் விளையாடி இருக்கிறார். ஆபாசமாக பேசி பணம் சம்பாதிக்க கிருத்திகா நோ சொல்லி இருக்கிறார். நாளாக, நாளாக கோடிக்கணக்கில் பணம் கொட்ட வேறு வழியின்றி மதனின் காரியங்களுக்கு துணை போயிருக்கிறார்.
தமது தோழிகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கி அசத்தி இருக்கின்றனர். போலீசாரே வியக்கும் வகையில் கிருத்திகாவின் வங்கி கணக்கில் 4 கோடி ரூபாய் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.