ஸ்டெர்லைட் திறக்கப்படுகிறதா..? நாளை கூடுகிறது அனைத்துக் கட்சிக் கூட்டம்…!
சென்னை: நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை அமல்படுத்தி உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வர உள்ளன.
இந் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்கிறது. காலை 9.15 மணிக்கு நடக்க உள்ள கூட்டத்தில் கொரோனா பரவல் குறித்தும், அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தவிர ஸ்டெர்லைட் வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.