கடைசி நேர டுவிஸ்ட்..! இவர்கள் தான் புதுச்சேரி பாஜக அமைச்சர்களா..?
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து அமைச்சர்கள் பட்டியலை வழங்கி உள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி.
புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து என்ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் முடிவில் என்ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வென்றது. எந்த கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆகையால் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க என்ஆர் காங்கிரஸ் உரிமை கோரியது. மே 7ம் தேதி ரங்கசாமி மட்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அமைச்சர்கள் என்று யாரும் என்று பொறுப்பேற்கவில்லை.
அதன் பிறகு தான் பாஜகவின் சாணக்யத்தனம் வெளியே தெரிய ஆரம்பித்தது. யாருக்கு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி என்பதில் குழப்பம் நீடித்தது. கிட்டத்தட்ட 50 நாட்களாகியும் இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை.
சரி… ஆனது ஆச்சு என்பது போல, இப்போது அனைத்து பிரச்னைகளும் முடிவுக்கு வந்திருக்கிறது. அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசை சவுந்திர ராஜனிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கி இருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் யாருக்கு அமைச்சர் பதவி என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பட்டியலில் பாஜகவை சேர்நத நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகியோர் பெயர்கள் உள்ளனவாம். இதில் சாய் சரவணன் தான் ஜான்குமாருக்கு கிடைக்க வேண்டிய அல்லது தருவதாக பாஜக உறுதியளித்த அமைச்சர் பதவி தரப்பட்டு உள்ளதாம்.
என்ஆர் காங்கிரஸ் கட்சியில் லட்சுமி நாராயணன், திருமுருகன், லட்சுமி காந்தன் ஆகிய நபர்களின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.