#விஜயகாந்த்_எனும்_மாமனிதர் போய்வாருங்கள் கேப்டன்…!
மக்களின் ஏகோபித்த கண்ணீர் அஞ்சலியுடன் நடிகர் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஏற்றுக் கொள்ளவே முடியாத இழப்பு நடிகர் விஜயகாந்தின் மரணம். எந்த கட்சியை சார்ந்தரானாலும் சரி, நடிகர்களின் தீவிர ரசிகர்களானலும் சரி… கேப்டன் விஜயகாந்தின் மரணம் கண்களை குளமாக்கிவிட்டது.
மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த தருணம் தோற்றுப்போக காலன் வென்றுவிட்டான் காவியத்தலைவனை…! தீவுக்திடலில் இருந்து ஊர்வலமாக மக்கள் கண்ணீரில் மிதந்தபடியே தேமுதிக அலுவலகம் கொண்டு வரப்பட்டது விஜயகாந்தின் உடல்.
மெல்ல, மெல்ல வாகனத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட கேப்டன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, மா சுப்பிரமணியன், கேஎன் நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். ஓ பன்னீர்செல்வம், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.
24 போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொருவரும் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
சந்தன பேழையில் துயில் கொண்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு தேவாரம், திருவாசனம், சிவ பாடல்கள் பாடி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மகன்கள் இருவரும் கண்ணீர் மல்க… இறுதிச்சடங்கு செய்ய கேப்டன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
போய் வாருங்கள் கேப்டன்… மக்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் ஒரு சகாப்தம்….!!