ஸ்டாலின் 100…! பதவிகள் பறிக்கப்படுகிறதா..? பரபரப்பில் முக்கிய புள்ளிகள்
சென்னை: ஆட்சியின் 100வது நாளில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்ய போவதாகவும் அப்போது சில அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த முறை வித்தியாசமான, அதே நேரம் கண்டிப்பான ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் படு தீர்க்கமாக இருக்கிறார். அது அவருக்கு ரொம்பவும் நல்ல பெயரை கொடுத்திருக்கிறது. கண்டிப்பு பிளஸ் சுறுசுறுப்பு என்று படு ஸ்பீடாக, சுறுசுறுப்பாக களத்தில் அவர் இருக்கிறார்.
கட்சியில் யார் சரியாக கடமையை செய்யவில்லை என்று லிஸ்ட் போட்டு அதன் படி நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் பற்றியும் performance ரிப்போர்ட் எடுக்க சொல்லி இருக்கிறாராம்.
முதல்வராக பதவியேற்று நேற்றுடன் சரியாக 2 மாதங்கள் முடிகிறது. முதல் கட்டமாக ஸ்டாலின் 100 என்ற மேஜிக் நம்பரை குறித்து வைத்துள்ளார் என்று அறிவாலய தரப்பில் இருந்தும், முக்கிய அதிகாரிகள் தரப்பிலும் இருந்து தகவல்கள் களமாடுகின்றன.
அதென்ன 100 என்கிறீர்களா…? திமுகவின் 100வது நாள் ஆட்சியின் சாதனைகள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதற்காக அமைச்சர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்துவருவதாக முக்கிய விஷயம் கசிந்து இருக்கிறது.
அமைச்சர்களின் துறை ரீதியான செயல்பாடு, அதிகாரிகளிடம் அணுகுமுறை, மக்களிடம் உள்ள நெருக்கம் என தனி மார்க் போடும் நடவடிக்கைகள் இருக்குமாம். இப்போதே யார், யார் எப்படி இருக்கிறார்கள் என்று அவ்வப்போது கேட்டு வரும் ஸ்டாலின் 100 நாளில் இந்த ரிப்போர்ட் அவர் கைகளுக்கு கொண்டு சேர்க்கப்படுமாம்.
அவரின் மதிப்பீட்டில் பெயில் ஆகும் அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்படும் என்று விஷயம் கசிந்து திமுக வட்டாரம் பரபரப்பில் இருக்கிறது. மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதில் படு ஸ்டிரிக்ட் என்று ஸ்டாலின் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.
அமைச்சர்களுக்கு இது பற்றி முன்பே சொல்லி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை பாயும் என்று ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் வார்னிங் கொடுத்திருந்தார். அதை மனதில் கொண்டு அமைச்சர்களும் நாள்தோறும் படு சுறுசுறுப்பாக களமாடி வருகின்றனர்.
ஆனாலும் 100 நாட்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் இருப்பதால் எதிலும் இப்போதைக்கு மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறதாம். இருந்தாலும், அடுத்து வரக் கூடிய நாட்களில் நிலைமைகள் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.