ராத்திரி நேரம்.. சாலையில் நடந்து போனதா ஏலியன்…? திகில் வீடியோ…
ராஞ்சி: ஜார்க்கண்டில் ஏலியன் சாலையில் ராத்திரி நேரம் ஏலியன் ஹாயாக நடந்து போவது போன்ற வீடியோ ஒன்று திகிலை கிளப்பி இருக்கிறது. ஆனால் அது ஏலியன் இல்லை என்ற விவரம் பின்னர் வெளி வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் உள்ள சாலையில் இந்த ஏலியன் சம்பவம் நடந்திருக்கிறது. அந்த வீடியோ ராத்திரியில் எடுக்கப்பட்டு உள்ளது. பாலம் பக்கத்தில் சாலையின் ஓரத்தில் ஒல்லியாக ஒரு உருவம் நடந்து செல்கிறது.
இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் அதிர்ந்து போய் அதையே பார்க்கின்றனர். அந்த உருவம் வேக, வேகமாக நடந்து போகும் காட்சிகள் அதில் உள்ளன. இந்த வீடியோ பெரும் வைரலாகி உள்ளது.
என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ள வீடியோவின் உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் ஆராய்ச்சியில் இறங்கினர். அந்த குறிப்பிட்ட திகில் வீடியோ ஹசாரிபாக் பகுதியில் எடுக்கப்படவில்லை என்பது தெரிந்தது. அதற்கு பதிலாக கர்சாவான் என்ற மாவட்டத்தில் செரைகேலா என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அந்த வீடியோவை ஷூட் செய்தவர்களில் ஒருவர் இது பற்றி உண்மை விவரத்தை தெரிவித்துள்ளார். துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு கர்சாவன் வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், பேய் என்று பயந்து அலறியதாகவும் கூறி இருக்கின்றனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்த போது, அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்றும், ஆடைகளின்றி நடந்து போய் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனாலும் இந்த வீடியோவை இணையத்தில் பார்ப்பவர்கள் இஷ்டம் போல ஏதாவது ஒன்றை கூறி வருகின்றனர்.