Sunday, May 04 12:03 pm

Breaking News

Trending News :

no image

அடேயப்பா…! ராஜகோபாலன் மீது மொத்தம் 25 புகார்கள்…! மிரண்ட காவல்துறை..


சென்னை: பாலியல் ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 25க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதால் காவல்துறை ஒட்டு மொத்தமாக மிரண்டு போயிருக்கிறது.

சென்னையில் உள்ள பிரபலமான பள்ளி தான் பிஎஸ்பிபி எனப்படும் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி. மேல்தட்ட மக்களின் பள்ளி என்று அழைக்கப்படும் அந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் என்பவர் மீது மாணவிகள் தெரிவித்த பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரச்னை பூதாகரமாக வெடிக்க வேறு வழியின்றி அவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. பள்ளி நிர்வாகத்திடமும், ராஜகோபாலனிடமும் போலிசார் விசாரணை நடத்தினர். ராஜகோபாலன் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் இருந்த பல முக்கிய சங்கதிகளை ராஜகோபாலன் பயந்து போய் டெலிட் செய்துவிட்டாராம். ஆனால் சைபர்  கிரைம் உதவியுடன் எல்லாம் மீண்டும் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து பின்னர் கைது செய்யப்பட்டு புழலுக்கும் அனுப்பப்பட்டுவிட்டார் ராஜகோபாலன்.

இந் நிலையில் ராஜகோபாலன் மீது கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான பாலியல் புகார்கள் வந்து குவிந்துவிட்டனவாம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் வாட்ஸ் அப் எண்ணுக்கு இந்த புகார்கள் வந்திருக்கின்றன. அதில் கிட்டத்தட்ட 16 புகார்கள் தமிழக்ததின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வரும் 4ம் தேதி பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகி ஆகியோரை நேரில் ஆஜராக வேண்டும் என்று குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

Most Popular