வயிற்றில் 'அந்த' குறியீடு…! வலையில் ஏலியன் மீன்..! தெறித்து ஓடிய மீனவர்
ரஷ்யாவில் மீனவர் வலையில் ஏலியன் மீன் சிக்கிய சம்பவம் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
கடல்பகுதிகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன்களை பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் ரோமன் பொரட்சேவ். 39 வயதே ஆனாலும் மீன்பிடிப்பதை அவர் விடவில்லை.
சில நாட்களுக்கு முன்பு வழக்கமாக ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வலையை இழுத்து மீன்களை சேகரிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது வலையில் விசித்திரமான மீன் ஒன்று சிக்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறார்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை… அந்த மீனின் கண்கள் பொத்தான் போன்று காட்சி தருகிறது. கறுப்பு, வெள்ளி கலந்த நிறத்தில் மீன் உள்ளது. விசித்திரமான வாய் பகுதி, அரக்கத்தனமான பற்கள் ஆகியவற்றை கண்டு மிரண்டு விட்டார்.
எல்லாவற்றையும் விட வயிற்றில் ஒரு விசித்திரமான குறியீட்டை அவர் கண்டு உள்ளார். அனைத்தையும் கண்ட அவர் இதற்கு ஏலியன் மீன் என்று பெயர் வைத்துள்ளார். இந்த மீனை பல கோணங்களில் போட்டோவும், வீடியோவும் எடுத்து இணையத்தில் பதிவேற்றி உள்ளார்.
ஏலியன் மீன் என்று ரோமன் பெயரிட்டதால் என்னவோ… இந்த செய்தி உலகம் முழுவதும் வலம் வர ஆரம்பித்துள்ளது. பலரும் ஏலியன் மீன் போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்து கலக்கி வருகின்றனர்.