மீண்டும் பிரதமர் ஆவாரா மோடி..? தேர்தல் கருத்துக் கணிப்பு டுவிஸ்ட்…! #LokSabhaElection2024
2024ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் வென்று யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள தருணத்தில் இப்போது மக்களின் மனோநிலை எப்படி உள்ளது என்பதை அறியும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ABP-C voter இணைந்து நடத்திய லோக்சபா 2024 தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள் ஒட்டு மொத்தமாக வெளியாகி இருக்கிறத.
ஏபிபி, சி வோட்டர்ABP- C VOTER நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம், 543 தொகுதிகளில் இருந்து 13115 வாக்காளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். CATI interviews என்ற முறையில் அதாவது (computer assisted telephone interviewing) கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது.
543 தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 295 தொகுதிகள் முதல் 335 தொகுதிகள் வரை கிடைக்கும் என்றும், 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராவார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 205 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் மாநிலம் வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், 4 திசைகளின் அடிப்படையில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் என பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் யாருக்கு வெற்றி என்று பட்டியலிடப்பட்டு இருந்தது.
அதன்படி, பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு 80 முதல் 90 தொகுதிகளும், காங்ரசின்இந்தியா கூட்டணிக்கு 50 முதல் 60 தொகுதிகளும் கிடைக்கும்.
வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 180 தொகுதிகளில் அதிகபட்சமாக பாஜக கூட்டணிக்கு 150 முதல் 160 சீட்களும், இந்தியா கூட்டணிக்கு 20 முதல் 30 தொகுதிகளும் கிடைக்கும். இந்த மண்டலத்தில் அரியானா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வருகின்றன. ஜம்முகாஷ்மீர், லடாக், சண்டிகர், டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களும் இந்த மண்டலத்திற்குள் வருகின்றன.
தெற்கு மண்டலத்தில் பாஜக கூட்டணிக்கு அமோக வரவேற்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட இந்த மண்டலத்தில் பாஜக கூட்டணிக்கு வெறும் 20 முதல் 30 தொகுதிகள் தான் கிடைக்குமாம்… இந்தியா கூட்டணிக்கு 70 முதல் 80 தொகுதிகளும், மற்ற கட்சிகளுக்கு 35 தொகுதிகள் வரையும் சீட்டுகள் கிடைக்கும்.
மேற்கு மண்டலமான குஜராத், மத்தியி பிரதேசம், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு 45 முதல் 55 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 25 முதல் 35 தொகுதிகளும் கிடைக்கும்.
நாடு முழுவதும் 543 தொகுதிகளையும் ஒன்று சேர்த்தால் பாஜக கூட்டணிக்கு 295 முதல் 335 வரையும், காங்கிரசின் இந்தியா கூட்டணிக்கு 165 முதல் 205 தொகுதிகளும் கிடைக்குமாம். வட இந்தியாவில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜக கூட்டணி, தென்னிந்தியாவில் மரண அடி கிடைக்கும் நிலை உள்ளது என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.