கருணாநிதி அலை…! கலக்கல் வீடியோ
பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவது அரசியல் தலைவர்களுக்கு பிடித்த ஒன்று. எந்த சந்தர்ப்பத்திலும் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டே இருப்பதே சிலருக்கு மட்டுமே கைவந்த கலை.
இன்னும் சிலர் நாட்டின் உச்சபட்ச பதவியில் இருந்தாலும் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. ஆனால் சில அரசியல் தலைவர்களை சந்திப்பது பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி ஒரு பட்டியலில் எப்போதும் முதலிடம் கலைஞர் கருணாநிதிக்கு தான்.
கருணாநிதியின் செய்தியாளர்கள் சந்திப்பு என்றால் யார் செல்வது? நான் நீ என்று போட்டி போடுவது பத்திரிகை உலகில் நடந்தது உண்டு. காரணம்… எந்த கேள்வியையும் புறந்தள்ளாமல் பதில் அளிப்பதே.
அப்படி ஒரு பேட்டி ஒன்று இப்போது இணையத்தில் ரவுண்டு கட்டி உலா வர ஆரம்பித்துள்ளது. செய்தியாளர்களை கருணாநிதியை சந்திக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால் செய்தியாளர் ஒருவர் அவரிடம், தமிழகத்தில் கருணாநிதி அலை வீசுகிறது என கூறலாமா? கேள்வி கேட்கிறார்.
அதற்கு, தமிழ்நாட்டுல கருணாநிதிதான் அலையா வீசுறாரு என்ற பதிலளிக்க, செய்தியாளர்கள் அரங்கமே அதிருகிறது. இந்த வீடியோவை இப்போது இணையத்தில் பதிவேற்றி அனைவரும் ரசித்து வருகின்றனர்.
அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.