திடீர் ஷாக்…! டிடிவி தினகரன் இல்ல திருமணம் தள்ளி வைப்பு…!
தஞ்சை: வரும் 13ம் தேதி நடப்பதாக இருக்க டிடிவி தினகரன் மகள் திருமணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் மகளுக்கும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகளுக்கும சில மாதங்களுக்கு முன்னதாக கல்யாணம் பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது. வரும் 13ம் தேதி திருமணத்தை நடத்தி கொள்வது என்றும் இரு வீட்டார் தரப்பிலும் முடிவானது.
இந் நிலையில் எதிர்பாராத விதமாக இந்த திருமணம் இப்போது தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணசாமி வாண்டையார் தந்தை துளசி அய்யா வாண்டையார் அண்மையில் காலமானார். மிக பெரிய இந்த துக்க நிகழ்வு வாண்டையார் குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஆகையால் இப்போது திருமண வைபோகம் வேண்டாம் என்று டிடிவி தினகரன் யோசனை தெரிவித்து இருக்கிறார். அதன்படி இந்த திருமணம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அமமுகவினர் தெரிவித்து உள்ளனர்.