தல அஜித் வேற லெவல்….! ரிலீசானது வலிமை மோஷன் போஸ்டர்…! வாவ்…!
சென்னை: சொன்னபடி 6 மணிக்கு வெளியான வலிமை பட மோஷன் போஸ்டரை கண்டு தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகிவிட்டது வலிமை படம் பற்றிய பேச்சுகள் ஆரம்பித்து…! படம் எப்படி இருக்கும்? கதை என்ன..? எப்போது ரிலீஸ்..? என்று ஏக போகத்துக்கும் தகவல்கள் வந்து கொண்டே இருப்பதால் என்னவோ படம் மீதான எதிர்பார்ப்பு சாமானிய ரசிகருக்கும் தொற்றி கொண்டு விட்டது.
அதிலும் படம் பற்றிய அப்டேட்டுகள் சர்வதேச அளவில் எதிரொலிக்க என்ன தான் நடக்கிறது என்று கேள்விகளும் எழ ஆரம்பித்தன. அனைத்து கேள்விகளுக்கும் ஒரு மோஷன் பட போஸ்டரில் பதில் சொல்லி பின்னி பெடலெடுத்து இருக்கிறது வலிமை படக்குழு.
இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வலிமை பட மோஷன் போஸ்டர் சொன்னபடி வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 1 நிமிடம் 24 விநாடிகள் தான் இந்த மோஷன் போஸ்டர். எடுத்த எடுப்பிலே பைக் பந்தய வீரர் ஒருவர் தோன்ற… பின்னணியில் பைக் உறுமும் சத்தத்துடன் மாஸ் காட்டுகிறது மோஷன் போஸ்டர்.
படத்தில் அஜித்தின் பைக் சாகசங்கள் மாஸ் ரகம் தான் என்று இப்போதே கொண்டாட ஆரம்பித்து இருக்கின்றனர். கிட்டத்தட்ட ஆங்கில படங்களுக்கு இணையாக மோஷன் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என்றும் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
வரும் தீபாவளிக்கு எப்படியாவது வலிமையை ரிலீஸ் செய்ய படக்குழு தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 3 நாட்கள் ஷூட்டிங்குக்கு பின்னர் வெளிநாட்டில் பைக் சாகச காட்சி ஒன்று பாக்கி இருக்கிறதாம்
அதை முடித்துவிட்டால் அடுத்து எல்லாமே படு ஸ்பீடில் முடிவாகி விடும் என்கிறது வலிமை படக்குழு. சண்டே டிரெங்கில் வலிமை மோஷன் போஸ்டரை தல ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.