அப்பாடா..! நைட் ரிலீசான காங். வேட்பாளர்கள் பட்டியல்.. ஆனால் ஆச்சரியம்..!
சென்னை: சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
மொத்தம் போட்டியிடும் 25 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு இன்னமும் இழுபறி நீடிப்பதால் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதன் முழு விபரம் வருமாறு:
1. பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர்
2. பெரும்புதூர்- செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம்
4. ஊத்தங்கரை(தனி)- ஆறுமுகம்
5. ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்
6. உதகமண்டலம்- கணேஷ்
7. கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்
8. காரைக்குடி-எஸ்.மாங்குடி
9. மேலூர்- ரவிச்சந்திரன்
10. சிவகாசி- அசோகன்
11.ஸ்ரீ வைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
12. கிள்ளியூர்- ராஜேஷ்குமார்
13. ஈரோடு கிழக்கு- திருமகன் ஈ.வே.ரா
14. தென்காசி- பழனிநாடார்
15. அறந்தாங்கி- எஸ்.டி.ராமச்சந்திரன்
16. விருத்தாசலம்-எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்
17. நாங்குநேரி- ரூபி மனோகரன்
18. கள்ளக்குறிச்சி (தனி)- மணிரத்தினம்
19. திருவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ்
20. திருவாடனை- ஆர்.எம்.கருமாணிக்கம்
21. உடுமலைப்பேட்டை-தென்னரசு
இதுதவிர கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களத்தில் உள்ளார்.