Sunday, May 04 12:18 pm

Breaking News

Trending News :

no image

திருவள்ளுவர் தினம்… வீடியோ வெளியிட்டு ஆச்சர்யம் காட்டிய பிரதமர் மோடி


டெல்லி: திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு உள்ளது, அனைவரையும் கவர்ந்துள்ளது.

உலக பொதுமறை திருக்குறளை படைத்த திருவள்ளுவர் போற்றும் வகையில் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

திருவள்ளுவர் தினத்துக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும் டுவிட்டர் பதிவில் வாழ்த்து கூறி உள்ளார். மேலும் ஒரு வீடியோவையும் வெளியிட்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.

பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

Most Popular