கல்லூரிகளில் இனி வகுப்புகள் உண்டா..? தமிழக அரசு அறிவித்த அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றானது வெகு வேகமாக அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் நாள் ஒன்றுக்கு 1000ஐ கடந்து அதிர வைக்கிறது.
பாதிப்புகள் அதிகமாகி வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி வாரத்தில் 6 நாட்களும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.