திமுக முக்கிய அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி….! மருத்துவமனைக்கு நேரில் போன ஸ்டாலின்
சென்னை: வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்துக்கு இன்று திடீரென என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆஞ்சியோ சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து, மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து உடல்நலன் குறித்து விசாரித்தார். அண்மையில் கொரோனா தாக்குதலுக்கு ஆளான எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிகிச்சைக்கு பின்னர் குணம் பெற்றார்.
கொரோனா பாதிப்புக்கு ஆளாகி குணம் பெற்றவர்கள் குறிப்பிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்று சொல்லப்படும் நிலையில் எம்ஆர் பன்னீர்செல்வத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.