சசிகலாவின் ஆடியோ அரசியல்…! அந்த 'பிளானை' கையில் எடுக்கும் ஈபிஎஸ்…!
சென்னை: சசிகலாவின் ஆடியோ அரசியலை எதிர்கொள்ள அதிரடி ஆட்டத்தை ஈபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் அதிமுக அடுத்தது உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. கட்சியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதை விட சசிகலாவின் ஆடியோ அரசியலை எப்படி எதிர்கொள்வது என்பது தான் இப்போது ஒவ்வொரு அதிமுக தொண்டரின் எண்ணமாக உள்ளது.
ஆடியோ அரசியலுக்கு செக் வைக்க வேண்டும் என்று ஒரு பக்கம் அதிமுகவில் கடும் விவாதங்கள் எழவே, தொலை பேசியில் உரையாடியவர்களை ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் கட்டம் கட்டி வருகின்றனர். ஆனால் அது எந்தளவுக்கு ஒர்க் அவுட்டாகி உள்ளது என்பது தெரியாத நிலையில் செம பிளான் ஒன்றை ஈபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க முடியாது என்பதில் படு தில்லாக இருக்கும் ஈபிஎஸ், இந்த விஷயத்தை சாப்ட்டாக ஹேண்டில் செய்யும் ஓபிஎஸ்சை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். அவரின் தேனி மாவட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்பதை அடிக்கோடிட்டு காட்டுகின்றனர்.
ஓபிஎஸ் மூலம் சசிகலா காய் நகர்த்தும் நடவடிக்கைகளில் என்றாவது இறங்குவார் என்பதை ஈபிஎஸ்சும் நன்றாகவே அறிந்துள்ளாராம். ஆகவே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார் என்றும் அதன் எதிரொலி தான் கடந்த சில நாட்களாக அமமுகவினரை அதிமுகவில் இணைக்கும் படலம் என்று ஜாடை காட்டுகின்றனர்.
அதாவது ஒரு வாரத்தில் மட்டும் அமமுகவை சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்களை அதிமுகவில் இணைத்ததை சுட்டிக்காட்டும் அவர்கள், இது ஆரம்பம் என்றும் தான் அடுத்து வரக்கூடிய காலக்கட்டங்களில் அமமுகவின் அதிருப்தியாளர்களை மீண்டும் தாய் கழகமாம் அதிமுகவில் சேர்க்கும படலம் நீடிக்கும் என்பது கூறப்படுகிறது.
அதிமுகவில் தொடர் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விட அமமுகவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிமுகவில் இணைத்து கொள்ளலாம் என்று நினைக்கிறராம் ஈபிஎஸ். இந்த விவகாரத்தில் ஓபிஸ் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருப்பார் என்பதை நன்றாக தெரிந்த ஈபிஎஸ், அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் விரைவில் அதன் பலன் தெரியும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.