#Annamalai வாடா டேய்…! ஒருமையில் பேசிய பிரபல நடிகை
பாஜக தலைவர் அண்ணாமலையை மரியாதையின்றி ஒருமையில் பேசி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பிரபல நடிகை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுவது, மரியாதையின்றி பேசுவது அரசியல் களத்தில் சாதாரணமா என்று தெரியவில்லை. ஆனால் அது ரொம்ப சுஜிபி என்று காட்டி இருக்கிறார் நடிகையும், முன்னாள் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம்.
பாஜகவுக்கு எதிராகவும், அதன் முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராகவும் இன்றும் கடும் விமர்சனங்களை முன் வைக்கும் அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார்.
அதில் உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், சுற்றுலா சொகுசு படகுகள் என பல இடங்களில் மதுவை விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய கண்டனத்தையும் அவர் பதிவு செய்து இருக்கிறார்
https://twitter.com/Gayatri_Raguram/status/1738082540614013305
இந்த கருத்தை மேற்கோள்காட்டிய காயத்ரி ரகுராம், டேய் அண்ணாமலை இங்கே வா டா. மதுவிலக்கு குடிகார மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று நீ சொன்ன. இது உ.பி.மாடல் சனாதன தர்மமா? என்று மரியாதையின்றி பேசி தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தாம் சொல்ல வந்த கருத்தை நாகரிகமாக பேசவேண்டும், ஆனால் குறைந்தபட்ச நாகரிகம், வார்த்தை பயன்பாடு இன்றி காயத்ரி ரகுராம பேசி உள்ளார்.
அவரின் இந்த பதிவு அண்ணாமலை எதிர்ப்பு என்ற நிலைக்கு எதிராகவே தற்போது திரும்பி உள்ளது. அண்ணாமலை பற்றி விமர்சிப்பதை விட்டுவிட்டு, இப்போது காயத்ரி ரகுராமை போட்டு நெட்டிசன்ஸ் தக்காளி சட்னியாக்கி வருகின்றனர்.
தரம்தாழ்ந்த விமர்சனம், நாகரிகம் மிக முக்கியம், எதற்கு இந்த அசிங்கமான பேச்சு என்று சகல கலவையாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த பதிவுகள் இங்கே கீழே தரப்பட்டுள்ளன.