இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
சென்னையில் முன்னாள் பிரதமர் விபி சிங் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறக்க வைக்கிறார்.
புகழ் பெற்ற திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் செய்ய உள்ளதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேரி என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டு, அதற்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்காமல் அடம்பிடிக்கும் நடிகை குஷ்புவை கண்டித்து அவரது வீட்டின் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று போராட்டம் நடத்துகிறது.
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகம் பேர் தினசரி பயன்படுத்தி வருவதால் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி தினசரி 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் ரயில்கள் இன்று முதல் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
555வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் சுகாதார மையங்களை ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் என பெயர் மாற்றப்படும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அய்யன் என்ற புதிய மொபைல் அப்ளிகேஷனை கேரள மாநில வனத்துறை வெளியிட்டு உள்ளது.
பயணக்கைதிகள் அனைவரும் விடுதலையாகும் வரை ஓயமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.