எங்க மேலேயே எதுக்கு குறி வைக்கிறீங்க…? மத்திய அரசை எதிர்க்கும் பிரபல நடிகர்….!
சென்னை: மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்ட வரைவு மசோதாவை கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பி இருக்கிறார் பிரபல நடிகர் விஷால்.
மத்திய அரசானது ஒளிப்பதிவு சட்ட வரைவு 1952 மறுசீரமைக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளன. இந்த திருத்த சட்டத்தின் படி தணிக்கை செய்யப்பட்ட படங்களை மீண்டும் சென்சார் செய்ய முடியும்.
இந்த சட்டம் திரைத்துறையின் மீதான ஒடுக்குமுறை என்று சினிமா உலகம் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த சட்டம் பற்றி தமது கருத்துகளை வெளியிட மத்திய அரசு நேற்று வரை வாய்ப்பு அளித்து இருந்தது.
இந் நிலையில் நடிகர் விஷால் மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக தமது குரலை உயர்த்தி இருக்கிறார். இது குறித்து டுவிட்டரில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறி உள்ளதாவது:
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் எங்கே? தணிக்கை வாரியம் எதற்கு இருக்கிறது? பரபரப்பு நடவடிக்கைகள் எதற்கு? சினிமா துறையை எப்போதும் ஏன் குறிவைக்க வேண்டும்? முதலில் ஜிஎஸ்டி, பின்னர் பைரசி… இப்போது இந்த சட்டம். இந்த சட்டத்தைக் கொண்டு வருவது நியாயமில்லை என்று பொங்கி இருக்கிறார்.