Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

அமேசானில் ஆர்டர் பண்றீங்களா..? உஷாரா இருங்க…


ரிமோட் கண்ட்ரோல் கார் ஆர்டர் பண்ணியவருக்கு பிஸ்கட்டை அனுப்பி இருக்கிறது அமேசான்.

ஆன்லைன் ஆர்டர் என்பது இப்போது பேஷன் ஆகிவிட்டது. துணி வகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஆன்லைனில் புக் செய்து வாங்கி வருகின்றனர்.

மக்களின் வாழ்க்கையில் இன்றிமையாத ஒன்றாக மாறி போன அமேசானில் டெல்லியை சேர்ந்த விக்ரம் என்பவர் ரிமோட் கண்ட்ரோல் கார் ஒன்றை ஆர்டர் செய்தார். அவருக்கான பார்சலும் வந்தது. ஆசை, ஆசையாய் பிரித்தவருக்கு செம அதிர்ச்சி.

உள்ளே ஒரு பார்லே ஜி பிஸ்கட் இவரை பார்த்து பல் இளித்திருக்கிறது. நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்… பச்சை மிளகாய் கடித்தது போன்று கோபத்தில் பல மடங்கு குதித்து ஆத்திரப்பட்டு இருப்போம். அமேசானில் புகாரை தட்டிவிட்டு இருப்போம்.

ஆனால் நம்ம விக்ரமோ.. வந்த கோபத்தை ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு சூடாக ஒரு டீ போட்டு கொண்டு வந்தார். பார்லே ஜி பிஸ்கட்டை பிரித்து வைத்து கொண்டு சாப்பிட்டு மகிழ்ந்து இருக்கிறார். இந்த சம்பவத்தை அவர் தமது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவரின் பொறுமைக்கும், கையாண்ட விதத்துக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Most Popular