அவன் பொருள் வச்சு.. அவனையே போடறது இதுதான்…! நெட்டிசன்ஸ் கலக்குங்க
இது தேர்தல் காலம்… ஆகையால் வீடியோக்களுக்கு பஞ்சமில்லை. இஷ்டம் போல, தம் மனதில் தோன்றியதை எல்லாம் வீடியோக்களாக உருவாக்கி இணையத்தை துவம்சம் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
இப்படிக்கா.. ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு வீடியோ. அப்புறம்… அப்படிக்கா ஒரு எதிர்ப்பு வீடியோ என ரகம், ரகமாய் வீடியோக்கள் உலா வருகின்றன. சில வீடியோக்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து மக்களை கலகலவென வைத்திருக்கும்.
அப்படி ஒரு வீடியோ இப்போது அங்கே, இங்கே என எல்லா பக்கமும் சுற்றிக் கொண்டு இருக்கிறது. பெட்ரோல் விலை, நாட்டின் பணவீக்கம், பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை என மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி வீடியோக்களில் குசும்பை காட்டி வருகின்றனர்.
அரசின் திட்டங்கள் பற்றி வெளியாகும் வீடியோக்களை அப்படியே உல்டாவாக்கி நாட்டின் நிலைமை இதுதான் மக்களே என்று வெளிச்சம் போட்டு லைக்குகளை அள்ளுகின்றனர்.
அப்படி ஒரு வீடியோதான் மீண்டும் டிரெண்டிங்காக உருமாறி இருக்கிறது. அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டுள்ளது.