வாடகைக்கு வீடு தேடும் ஓபிஎஸ்…!
சென்னை: சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகைக்கு ஓ பன்னீர்செல்வம் வீடு தேடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து திமுக ஆட்சியில் இப்போது அமர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த இபிஎஸ் இப்போது எதிர்க்கட்சி தலைவராகிவிட்டார். இது கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்டது.
சென்னை கிரின்வெய்ஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் தற்போது தங்கி உள்ள இபிஎஸ், அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதே பங்களாவில் தங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில்
ஆனால் கிரின்வெய்ஸ் சாலையில் தங்கியிருந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்களது பங்களாக்களில் இருந்து காலி செய்து விட்டனர். முன்னாள் துணை முதலைமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்ட சிலர் இன்னமும் வீடுகளை காலி செய்யவில்லை.
ஓபிஎஸ்சை பொறுத்தவரையில் அவர் இப்போது சென்னையில் வாடகைக்கு வீடு பார்த்து வருகிறார். குறிப்பாக ராஜா அண்ணாமலைபுரத்தில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார். முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்யும் வரை தொந்தரவு செய்யக்கூடாது என்று தமிழக அரசு கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.