தமிழகத்தில் திடீர் நிலநடுக்கம்…! 2 முறை அதிர்வு… மக்கள் பீதி
சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வு பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை 7.39 மணிக்கு திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக இந்திய புவியியல் மையம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மட்டும் அல்லாது வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 2 முறை நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
நிலநடுக்த்தின் அதிர்வுகள் பற்றி அறிந்த மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது பற்றி கூடுதல் தகவல்களை தமிழக அரசின் புவியியல் ஆய்வு மையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.