தோனியின் ரசிகர்கள் கோபம்…! டுவிட்டர் அடித்த அந்தர்பல்டி
தோனியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து ப்ளூடிக் நீக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் ரீப்ளேஸ் செய்யப்பட்டு உள்ளது.
உயர்பதவியில் உள்ளவர்கள், விஐபிக்கள், திரை உலகத்தினர், விளையாட்டு துறையில் புகழ்பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கு டுவிட்டரில் ப்ளூடிக்கை நிர்வாகம் வழங்கி வருகிறது. போலியாக யாரும் கணக்குகளை தொடங்கி விடக் கூடாது என்பதற்காக டுவிட்டர் பதிவில் அவர்களுக்கு ப்ளூடிக் வழங்கப்படுகிறது.
ஆனால் டுவிட்டர் செய்த ஒரு காரியம் தல தோனியின் ரசிகர்களை செம கோபத்தில் கொண்டுபோய் விட்டு உள்ளது. அதாவது தோனியின் டுவிட்டர் பதிவில் உள்ள ப்ளூடிக்கை நீக்கி இருக்கிறது. இது தோனி ரசிர்களுக்கு கோபத்தை தர, டுவிட்டருக்கு எதிராக பொங்கி தள்ளிவிட்டனர்.
ரசிகர்களின் செமத்தியான கோபத்தை கண்ட டுவிட்டர் நிர்வாகம் அடுத்த சில மணி நேரங்களில் ப்ளூடிக்கை மீண்டும் தோனியின் டுவிட்டர் பக்கத்துக்கு வழங்கி உள்ளது. இதனால் தல ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.
அதே நேரத்தில் டுவிட்டர் நிர்வாகம் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது. ப்ளூடிக் வழங்கப்பட்ட டுவிட்டர் பக்கம் ஜனவரிக்கு பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. அதாவது எந்த பதிவும் போடப்படவில்லை. கடைசியாக அவரது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி மாதம் பதிவு வெளியிடப்பட்டது.
ஆகவே தான் ப்ளூடிக் நீக்கப்பட்டதாக டுவிட்டர் கூறி உள்ளது. ஆனால் ரசிகர்களின் உச்சக்கட்ட கோபத்தால் தமது பல்டி அடித்து மீண்டும் ப்ளூடிக்கை வழங்கி இருக்கிறது டுவிட்டர் நிர்வாகம்.