Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

கொளத்தூர் டி. ஊராட்சியில் கொடுமை..! தலித் மக்களை காலில் விழ வைத்த ஆதிக்க சாதி…! முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா..?


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய தலித் மக்களை ஆதிக்க சாதியினர் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தை அடுத்துள்ளது ஒட்டனந்தல் என்ற கிராமம். இந்த கிராமமானது திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் கொளத்தூர் டி. ஊராட்சிக்குட்பட்டது கிராமத்தில் தலித் சமூகத்தினர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். இதையே பிரச்சனையாக்கி ஆதிக்க சாதியினர் தலித் மக்களுக்கு செய்த கொடுமை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள தலித் மக்கள், ஊரில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் போலிசில் புகார் கூ,ற அவர்கள் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் காவல் நிலையம் சென்ற தலித் மக்கள், மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளனர்.

ஆனால் அதன் பிறகு ஊர் வந்த தலித் மக்களை கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த ஊரில் உள்ள ஆதிக்க சாதியினர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அனைவர் முன்பும், தலித சமுதாய பெரியவர்களை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்தும், கொடுமைப்படுத்தியும் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் கொடுமை தாங்காத தலித் மக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை. முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டசபை தொகுதியின் பெயர் தாங்கிய இந்த கொளத்தூர். டி ஊராட்சியில் இந்த வன்கொடுமை அரங்கேறி இருக்கிறது.

சாதிய கொடுமைகள் ஒழிந்துவிட்டதாக கருதப்படும் தருணத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதி பெயர் கொண்ட கொளத்தூர் டி. ஊராட்சியில் நடைபெற்ற இந்த சாதி கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு…!

Most Popular