இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
லஞ்சம் வாங்கி தொக்காக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது விவகாரத்தில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். திவாரியின் அறையில் விடிய, விடிய சோதனையில் இறங்கி முக்கிய ஆவணங்களை கண்டுபிடித்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட இருக்கிறது.
துபாயில் நடைபெற்ற ஐநா உலக பருவநிலை உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார்.
புயல் அறிவிப்பு, கனமழை காரணமாக முதலமைச்சர் ஸ்டாலினின் அனைத்து நிகழ்ச்சிகளும் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களுக்க பயிற்சி வகுப்பு இருப்பதால் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கும்பக்கரை அருவியில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
560வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும் 8 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் கேட்டுக் கொண்டு உள்ளார்.
ஆஸி.க்கு எதிரான 4வது டி 20 போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது.