5ல் ஒண்ணு சின்ன கேப்டன்…?
சென்னை: ஒரு வழியாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரட்டை குதிரையில் சவாரி என்றால் அரசியல் கட்சிகளில் பாமக, தேமுதிக ஆகியவற்றை கூறலாம். எந்த தேர்தல் என்றாலும் ஏதேனும் ஒரு கூட்டணியில் ஐக்கியமாகிவிடுவதை பார்க்கலாம்.
இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுவிட அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளது தேமுதிக. பல கட்ட பேச்சுவார்த்தை, இழுபறி என முடிவாக 5 தொகுதிகளை அக்கட்சிக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.
இந்த 5ல் ஒரு தொகுதியான விருதுநகரில் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் களம் காண வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
5 தொகுதிகள் விவரம்;
திருவள்ளூர்
விருதுநகர் (விஜய பிரபாகரன் போட்டியிட வாய்ப்பு)
மத்திய சென்னை
கடலூர்
தஞ்சை
----