ஏழுமலையான் கோயிலில் நடந்த அதிர்ச்சி…! கோபுரத்தில் தென்பட்ட ராஜ நாகம்…!
திருப்பதி: திருப்பதி சீனிவாசா மங்காபுரம் கோயிலில் ராஜ நாகம் ஒன்று கோபுரத்தில் ஏறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவின் கோரத்தாண்டவம் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி நகரில் பல கோயில்கள் அடைக்கப்பட்டு உள்ளன. அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகள் நேரத்தில் வந்து பூஜைகள் செய்துவிட்டு போகின்றனர்.
தற்போது தேவஸ்தானத்தின் கோயில்களில் வனவிலங்குகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. கபில தீர்த்தம் கோயிலில் சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் தென்பட்டது. தொடர்ந்து பல விலங்குகள் கோயிலுக்கு படையெடுத்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தொடரும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் கோயில் எல்லைகளை மூடி சீல் வைத்து இருக்கின்றனர். இந் நிலையில் திருப்பதி சீனிவாசா மங்காபுரம் கோயிலில் ராஜ நாகம் ஒன்று கோபுரத்தில் ஏறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வனவிலங்குகள், பாம்புகள் கோயிலுக்குள் படையெடுத்து வருவது, பக்தர்களை பெரும் சோகத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.