மும்மொழிக் கொள்கைக்கு ‘தடா’ போட்ட எடப்பாடி..! இது அம்மாவின் அரசு என்றும் அறிவிப்பு
சென்னை: மும்மொழிக் கல்வியை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
அண்மையில் புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதில் மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
3வது மொழி என்ன என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். 5ம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பிக்கும் முறை இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவது வேதனை தருகிறது .தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம். ஆகையால் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது. இந்த கொள்கையை மறு பரிசீலனை செய்ய சொல்லி மத்திய அரசு வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.