Sunday, May 04 12:14 pm

Breaking News

Trending News :

no image

எடப்பாடியை ‘அந்த’ வார்த்தை சொல்லி அழைத்த ஓபிஎஸ்…!


சென்னை: எடப்பாடி பழனிசாமியை அன்பு சகோதரர் என்று ஒ. பன்னீர்செல்வம் அழைத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. கோர்ட் தீர்ப்பால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: எம்ஜிஆர் அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக நடத்தியவர். அவர் மறைவுக்கு பின்னர் 30 ஆண்டுகள் கட்சியை திறமையாக நடத்தியவர் ஜெயலலிதா.

தற்போது அதிமுகவுக்குள் ஏற்பட்டசில கருத்துவேறுபாடுகள், பிரச்னைகளால் பிளவு ஏற்பட்டு ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. அதனால் தான் திமுக ஆளுங்கட்சியானது.

எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் பயணித்து கொண்டு இருக்கிறோம். அண்மையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அதிமுகவில் அசாதாரண நிலை ஏற்பட்டு உள்ளது. அனைத்து கசப்புகளையும் மறந்துவிடலாம்.

4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது முழு ஒத்துழைப்பு வழங்கினோம். அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும். அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும் நானும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என்றார்.

சசிகலா, டிடிவி தினகரன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், சின்னம்மாவும் இருக்கிறார்கள், டிடிவி தினகரனும் இருக்கிறார்கள், அனைவரும் ஒற்றுமையாக இணைவோம் என்று கூறினார்.

Most Popular