Sunday, May 04 01:06 pm

Breaking News

Trending News :

no image

நீங்க அரசு ஊழியரா…? முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அறிவிப்பு..?


சென்னை: அரசு ஊழியர்களுக்கு 28 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா தொற்று மக்களை மட்டுமல்ல… ஆளும் அரசுகளையும் பாடாய் படுத்தி வருகிறது என்பது தெரிந்த விஷயம். 2020ம் ஆண்டு ஜனவரியில் இருந்து 3 தவணைகள் அகவிலைப்படி நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொருளாதார தேவையை அதிகரிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு அப்போது வெளியிடப்பட்டது. நிதி ஆதாரத்துக்காக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.

அண்மையில் மத்திய அரசானது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. அப்போது புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இதே போன்று அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

ஆனால் தமிழக அரசு அகவிலைப்படி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. இப்போது மத்திய அரசின் அறிவிப்புப்படி தமிழகத்திலும் 17 முதல் 28 சதவீதம் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. அரசின் இந்த அறிவிப்பின் எதிரொலியாக 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.

Most Popular