Sunday, May 04 11:44 am

Breaking News

Trending News :

no image

தப்பு பண்றீங்க கமல்…! சல்லி, சல்லியாக சிதறும் மநீம…!


சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த விக்கெட்டாக அக்கட்சியின் பொது செயலாளர் சிகே குமரவேல் விலகி உள்ளார்.

தேர்தல் முடிவு வெளியான தருணத்தில் இருந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் பெரும் புயல் அடித்து வருகிறது. கமலின் எனது கட்சி என்ற பேச்சும், செயலும் பூகம்பமாக மாற முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரும் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

அந்த வரிசையில் இன்று கட்சியின் பொது செயலாளர் சிகே குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விலகுவதாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார்.

அவர் கமல்ஹாசனுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் குமரவேல் கூறி இருப்பதாவது: 2019ம் ஆண்டு மக்கள்நீதி மய்யத்திலிருந்து விலகிப் போனாலும்‌. தமிழகத்தில்உங்களாலும்மக்கள்நீதி மய்யத்தாலும்மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்என்ற நம்பிக்கையில்தான்நான்மீண்டும்இணைந்தேன்‌. மக்கள்இடத்திலும்அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும்மிக அதிகமாக இருந்தது.

கடந்த நவம்பர்‌ – டிசம்பர்மாதங்களில்கட்சியின்நடவடிக்கைகளாலும்‌. உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும்மக்களிடையே மய்யத்தின்மீதான வரவேற்பும்‌, நம்பிக்கையும்அதிகரித்ததை நான்கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து, மய்யத்திற்குடார்ச்லைட்‌’ சின்னம்மீண்டும்கிடைத்த போதும்‌, நடிகர் ரஜினிகாந்த்அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த போதும்‌, மக்கள்நீதி மய்யத்தின்மீதான அந்த நம்பிக்கையும்எதிர்பார்ப்பும்மேலும்பிரகாசமானது.

ஆனால்‌, இன்று நமக்கான வாய்ப்புகளை நாம்இழந்துவிட்டோம்‌. எதிர்க்கட்சியில்அமரவேண்டிய அத்தனை தகுதிகளும்நமக்கு இருந்த போதும்‌, ஒரு தொகுதியில்கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்?

உங்களுடைய அரசியல்ஆலோசகர்களும்அவர்களுடைய தவறான வழி நடத்தலும்தான்காரணம்‌. ஒரு தொகுதியில்‌, வெற்றி பெற்றால்போதும்என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும்செயல்பாடுகளும்தான்‌, மக்களிடையே இருந்த நம்மீதான நம்பிக்கையையும்‌, எதிர்பார்ப்பையும்தகர்த்து விட்டது.

நமது தோல்விக்கான காரணங்களையும்‌, காரணிகளையும்இதற்கு முன்விலகிய பொறுப்பாளர்கள்உங்கள்முன்னும்‌, ஊடகங்கள்முன்னும்வைத்துவிட்டார்கள்‌. அவர்கள்முன்வைத்த காரணங்களில்உண்மை இல்லாமல்இல்லை என்பது நீங்களும்அறிவீர்கள்‌. புதிதாக நான்சொல்வதற்கு ஒன்றும்இல்லை.

வரலாறு படைப்பவர்களாக இருக்கவேண்டிய நாம்‌, வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும்‌, ஆதங்கமும்எனக்கு நிறைய உண்டு. தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும்‌, மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்பாதையில்பயணிக்க விரும்புகிறேன்‌. ஆகவே, மக்கள்நீதி மய்யத்தின்அடிப்படை உறுப்பினர்என்ற நிலையிலிருந்து உடனடியாக விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Most Popular