Sunday, May 04 12:21 pm

Breaking News

Trending News :

no image

பவுடர் வடிவ கொரோனா மருந்து..! யார் சாப்பிடலாம்…? யார் சாப்பிடக்கூடாது..?


 

டெல்லி: தண்ணீரில் கலந்து சாப்பிடும் பவுடர் வடிவிலான கொரோனா மருந்தை யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது என்று டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தீவிரமாகி வரும் கொரோனாவின் 2வது அலையை கட்டுக்குள் கொண்டு வர  மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. அதன் முக்கிய கட்டமாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும், டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகமும் இணைந்து மருந்து வடிவிலான மருந்து,ஒன்றை உருவாக்கி உள்ளன.

இந்த பவுடர் வடிவ மருந்துக்கு  2 DG மருந்து என்று பெயர். இந்த மருந்தை சில நாட்களுக்கு முன்னர், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இணைந்து அறிமுகப்படுத்தினர். அவசரகால பயன்பாட்டுக்காக இந்த மருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த மருந்தை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்று டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

கொரோனா மிதமான பாதிப்பு உள்ளவர்கள், தீவிர பாதுகாப்பு உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரை ரொம்ப முக்கியம். இந்த மருந்து இன்னமும் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர வில்லை. விலையும் நிர்ணயிக்கப்படவில்லை.

2DG  மருந்தின் பெயரில் போலியானவை விற்கப்படுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Most Popular