விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவருக்கு நேர்ந்த பயங்கரம்…! புதுச்சேரியில் ‘ஷாக்’
புதுச்சேரி: நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதிரசிகர் மன்ற தலைவராக இருப்பவர் மணிகண்டன். புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நெல்லித்தோப்பு பகுதியில் அவரை சிலர் வழிமறித்தனர். தகராறில் ஈடுபட்ட அவர்கள், மணிகண்டனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு போராடிய மணிகண்டனை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவரை வெட்டிக்கொன்று தப்பிய கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.