பருத்திவீரன்…! படுத்தே விட்டான்யா…! எல்லாம் சுபம்
சென்னை: பருத்தி வீரன் பட விவகாரத்தில் அமீர் பற்றி பேசியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமீர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம் பருத்தி வீரன். படம் வந்து 17 ஆண்டுகள் கழித்து பிரச்னையை கிளப்பினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தமது பணத்தை கள்ள கணக்கு காட்டி திருடிவிட்டதாக வீடியோ வெளியிட்டும், பேட்டி கொடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவரின் செய்கை பூமராங் ஆகி அவரையே போட்டு தாக்கியது. பொன்வண்ணன், சசிக்குமார், சமுத்திரக்கனி, பாரதி ராஜா, டி. சிவா என ஒட்டு மொத்த திரையுலகமே கழுவி கழுவி ஊற்ற, இப்போது அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
அமீர் பற்றி தான் பேசிய அனைத்துக்கும் வருத்தம் தெரிவித்து, ஞானவேல் ராஜா அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன் விவரம் வருமாறு;
“'பருத்தி வீரன்' பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை;
என்றைக்குமே "அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்; ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்;
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது;
அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்;
என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான், நன்றி என்று கூறி உள்ளார்.