பதவியேற்ற 2 நாளில் ‘ஷாக்’…! முதலமைச்சருக்கு கொரோனா 'பாசிட்டிவ்'…!
புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து புதுச்சேரியின் முதலமைச்சராக ரங்கசாமி அண்மையில் பதவியேற்றுக் கொண்டார். அவருடைய பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவருக்கு நெருக்கமான ஆதரவாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 2 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது உறுதியானது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, அவருடன் கடந்த 2 நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.