Sunday, May 04 12:43 pm

Breaking News

Trending News :

no image

பிரபல நடிகை மகன் கொரோனாவுக்கு மரணம்… கணவர் உயிருக்கு போராட்டம்..!


சென்னை: பிரபல சினிமா நடிகையும், சீரியல்களில் பரிச்சயமான முகமாக வலம் வரும் கவிதாவின் மகன் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்.

கொரோனாவால் தமிழ் சினிமா படாதபாடு படுகிறது. விஐபிக்கள், முக்கிய நடிகர், நடிகைகள் என பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். தொடர் மரணங்கள் தமிழக சினிமாவை உலுக்கி இருக்கிறது.

இப்போது அடுத்த சோகமாக பிரபல நடிகையும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவருமான கவிதாவின் மகன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். நடிகை கவிதா இரட்டை ரோஜா, பாண்டவர் பூமி, மேட்டுக்குடி, ராசி என ஏராளமான படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். என்றென்றும் புன்னகை, நந்தினி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கவிதாவின் மகன் பெயர் சாய் ரூப். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவரது உடல்நிலை மோசம் அடைய சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். கவிதாவின் கணர் தசரத ராஜூக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். நடிகை கவிதாவின் மகன் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Most Popular