ரஜினிகாந்த் அக்காவை பார்த்திருக்கிறீர்களா…? இதோ பாருங்க… வைரல் போட்டோ
நடிகர் ரஜினியை எல்லாருக்கும் தெரியும்… ஆனால் அவரது அக்கா போட்டோ இணையத்தில் உலா வருவது தெரியுமா..?
நடிகர் ரஜினியை தெரியாதவர்கள் சினிமா உலகத்தில் மட்டும் அல்ல.. நிஜ வாழ்க்கையிலும் இருக்க முடியாது. அவர் நடித்துள்ள அண்ணாத்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தில் தமது போர்ஷனை முடித்து கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார். சிறப்பு அனுமதியோடு அவர் அமெரிக்காவுக்கு சென்ற போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை குஷிபடுத்தியது.
ரஜினியின் குடும்பத்தை பொறுத்தவரை அனைத்து தரப்பினரும் பார்த்திருக்கும் போட்டோ என்றால் அவரது அண்ணா சத்யநாராயணாவாக தான் இருக்கும். அவரது பல பேட்டிகளும் அனைவரும் பார்த்து இருக்கின்றனர்.
இந் நிலையில் தமது அக்காவுடன் ரஜினி இருக்கும் போட்டோ வெளியாகி அட… என்று அனைவரையும் வியக்க வைக்கிறது. தமது அக்கா அஸ்வத் பானுவுடன் ரஜினிகாந்த் எடுத்துள்ள போட்டோ தான் அது. கருப்பு வெள்ளை கலரில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
என்றோ எதிலோ பத்திரிகை ஒன்றில் வெளிவந்து இருக்கும் இந்த போட்டோவை இப்போதுள்ள அவரது ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்த போட்டோ பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.