இதை செய்தால் கொரோனா 3வது அலையை வராமல் செய்யலாம்..! மத்திய அரசு ‘ஐடியா’
டெல்லி: அனைத்து மாநிலங்களும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் 3வது அலையை தடுக்கலாம் என்று மத்திய அரசின் முதன்மை ஆலோசகர் யோசனை கூறி உள்ளார்.
கொரோனா எப்போது அழியும் என்று தெரியாத நிலை தான் உலகில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை விஸ்வரூபம் எடுத்து தாக்கி வருகிறது. நாள் ஒன்றின் பாதிப்பு என்பது 4 லட்சத்தை கடந்து சுகாதார நிபுணர்களை அலற வைத்துள்ளது.
இந் நிலையில் அனைத்து மாநிலங்களும் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் 3வது அலையை தடுக்கலாம் என்று மத்திய அரசின் முதன்மை ஆலோசகர் விஜய்ராகவன் யோசனை கூறி உள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
நாம் அனைவரும் கொரோனா 3வது அலையை தடுக்க முடியும். அதற்கு கடுமையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் நாட்டில் கொரோனா 3வது அலையை தடுக்கலாம் என்று கூறி உள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஜய்ராகவன், கொரோனாவின் 3வது அலையை தடுக்கமுடியாது, எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.